தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 2026-ல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில் வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் பெருந்துயர வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழுவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ரா கர்க் 2004ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் இணைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி கண்காணிப்பாளராக காவல்துறையில் தனது பணியை தொடங்கினார். நெல்லை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றி மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
பின்னர் சி.பி.ஐ.யில் பணியாற்றி அஸ்ரா கர்க் மீண்டும் தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்தான் த.வெ.க. ஆட்சியமைத்தவுடன் உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க்கை நியமித்திருக்கிறது.
