2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றி கழகம்’ வெற்றி பெற்று ச.ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றார். தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்த சூழலில்தான் முதன் முறையாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 14ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 14ம் தேதி) சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
