திமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சிபிஐ விசாரணை தான் நடக்கும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2021 முதல் 2016 வரை திமுக ஆட்சி நடந்தது. முதல்வராக முக ஸ்டாலின் இருந்தார். இவரது அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது 2021 முதல் 2023 வரை தமிழகத்தில் மொத்தம் 45,800 டிரான்பார்மர்கள் வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
மொத்தம் ரூ.397 கோடி என்ற அளவுக்கு முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். அதில், ”டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது போன்ற ஆதாரங்கள் உள்ளது.
இதனால் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள் முருகன் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 29 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வேளையில் நீதிமன்றம் ”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பொது ஒப்பந்தங்கள் தொடர்பானதாக உள்ளது. அதோடு மாநில அரசில்முக்கிய பொறுப்புகளை வகிப்பர்களுக்கு எதிரானதாக உள்ளது. இதனால் மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரிப்பது சரியானதாக இருக்காது. சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தவரிட்டது.
அதோடு வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டாம். சிபிஐ விரைவாக விசாரிக்க வேண்டும். சிபிஐக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புபோலீசார், டான்ஜெட்கோ ஆகியோர் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மின்வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீ்டடு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
