“வெற்றி பெற்​றதும் எங்​கும் தங்​காமல் உடனடி​யாக பனையூருக்கு வந்​து​விட வேண்​டும்’’என்று தவெக வேட்​பாளர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை வரும் 4-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் நேற்று முன்​தினம் வெளி​யாகின.

பெரும்​பாலான கணிப்​பு​கள் திமுக மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என தெரி​வித்​துள்​ளன. ஆக்​சிஸ் மை இந்​தியா நிறு​வனம் மட்​டும், தவெக 98 முதல் 120 இடங்​களை கைப்​பற்றி முதல் முயற்​சி​யிலேயே ஆட்​சியை பிடிக்க வாய்ப்​புள்​ள​தாக கணித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பனையூரில் உள்ள கட்​சித் தலை​மையகத்​தில் அனைத்​துத் தொகுதி வேட்​பாளர்​களு​ட​னும் விஜய் நேற்று அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதுகுறித்து தவெக சீனியர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘ வேட்​பாளர்​கள் பலர், வாக்கு சேகரிக்க சென்​ற​போது தாங்​கள் சந்​தித்த நெருக்​கடிகள், வாக்​குப்​ப​தி​வின்​போது நடந்த மோதல்​கள் குறித்து தெரிவித்தனர். அனைத்​தை​யும் பொறுமை​யாகக் கேட்​டுக் கொண்ட விஜய், ‘கருத்​துக்​கணிப்​பு​களை புறம் தள்​ளுங்​கள்.

மக்​கள் தீர்ப்பு நமக்கு சாதக​மாக இருக்​கும் என நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன். நீங்​களும் அதே நம்​பிக்​கை​யுடன் இருங்​கள். அதே​நேரத்​தில் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது கடு​கள​வும் பிச​காமல் விழிப்​புடன் இருக்க வேண்​டும்.

அனைத்​தும் சரி​யாக இருப்​பதை உறுதி செய்த பிறகே கையெழுத்​திட வேண்​டும்‘ என அறி​வுறுத்​தி​னார். மேலும், “வெற்​றிச் சான்​றிதழ் வாங்​கிய கையோடு எங்​கும் தங்​கி​வி​டாதீர்​கள்; வேறு யாருடைய அழைப்​புக்​கும் செவி​சாய்க்க வேண்​டாம்.

நேரடி​யாக பனையூர் அலு​வல​கத்​துக்கு வாருங்​கள். உங்​களுக்​காக நான் இங்கே காத்​திருப்​பேன்’’ என தெரி​வித்​தார், தேர்​தல் முடிவுக்கு பிந்​தைய ‘கு​திரை பேர‘ அரசி​யலை முன்​கூட்​டியே முறியடிக்க தயா​ராகி​விட்​டார்’’ இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

“வெற்றி பெற்​றதும் எங்​கும் தங்​காமல் உடனடி​யாக பனையூருக்கு வந்​து​விட வேண்​டும்’’ என விஜய் த.வெ.க. வேட்பாளர்களுக்கு உத்தரவு போட்டது குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், சமீபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் ஏழு (மாநிலங்களவை) பேரை பா.ஜ.க. கொத்தோடு ‘தூக்கியது’! இந்த அதிர்வில் இருந்து அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீளவில்லை.

தவிர, 2016ல் ஜெயலலிதா இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தார். ஆனால், சில மாதங்களிலேயே உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதன்பிறகு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கூவத்தூரில் நடந்த கூத்துக்கள் அனைவரும் அறிந்ததே! அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஓ.பி.எஸ். விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார். பா.ஜ.க.வும் ஓ.பி.எஸ்.ஸுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்தது. ஆனால், பி.ஜே.பி. எதிர்பார்த்த அளவு எம்.எல்.ஏ.க்களை ஓ.பி.எஸ்.ஸால் கூவத்தூரில் இருந்து பிரித்து எடுக்க முடியவில்லை.

எனவே, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் விஜய் தூக்கத்தை தொலைத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் பனையூருக்கு வெற்றி பெற்றவர்களை வரச்சொல்லியிருக்கிறார்’’ என்றனர்.

ஏற்கனவே, எடப்பா தொகுதியில் பழனிசாமிக்கு எதிராக போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் ‘காணாமல்’ போனது குறிப்பிடத்தக்கது. அங்கு த.வெ.க. டி.வி. சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal