த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்குமாறு செங்கல்பட்டு நீதிமன்றதில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார் மனைவி சங்கீதா!

ஒரு நடிகையிடம் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்யிடமிடருந்து விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டுள்ள அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘விஜய்யை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டேன். விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் சென்னையில் தற்போது வசிக்க இடம் இல்லாமல் இருக்கிறேன்; விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும்’’ என சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் தனது மனைவியை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காத விவகாரம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal