தமிழ்நாட்டிலேயே 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி மொடக்குறிச்சி
தமிழ்நாட்டிலேயே 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி மொடக்குறிச்சி ஆகும்…. இதனால் தேர்தல் கமிஷன் இந்திய அளவில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனு கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது வரலாறு..!
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.அதுமட்டுமல்ல ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலுமே கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவதால் மற்ற சமூகத்தினர் வேட்டு கவுண்டர், முதலியார், நாடார், வன்னியர் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எண்ணுகின்றனர்.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் மீண்டும் அனைத்து கட்சிகளுமே கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர்களை வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திமுகவில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில நிர்வாகி ஏற்கனவே போட்டியிட்ட எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., வி. பி. சிவசுப்பிரமணியம் பாஜக சார்பில் இந்நாள் எம்.எல்.ஏ, சி.சரஸ்வதி மருமகள் கிருத்திகா சிவகுமார் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியிலும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்த அருண் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இச்சமூகத்தை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் திமுக கூட்டணியில் வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ராஜ் கவுண்டர் அவர்கள் தலைமையில் புதிய திராவிடர் கழகம் நடத்திய ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய போது, அரசியல் அங்கீகாரம் குறித்து பேசி நம்பிக்கை உருவாக்கினார். தற்போது மொடக்குறிச்சி தொகுதியில் வேட்டுவ கவுண்டர் சமூகமும், அருந்ததியர் சமூகம் வாக்குகள் பலமாக உள்ளதால் மற்ற சமூகத்தினரின் எதிர்பார்ப்பும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை தவிர்த்து மாற்று சமூகத்தினரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிந்தனையில் உள்ளனர்.
அதன்படி புதிய திராவிட கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கினால் இவருடைய வெற்றி பிரகாசமாக இருக்கும் என்பது தொகுதி மக்களின் இன்றைய மனநிலை ஆகும்.
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தனித்துவமான ஒரு பெயராக புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜகவுண்டர் (எ) எஸ்.ராஜ்குமார் உருவெடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே உள்ள கருத்திபாளையத்தைச் சேர்ந்த இவர், ஒரு விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இன்று கொங்கு மண்டலத்தின் முக்கியச் சமூக அரசியல் சக்தியாகத் திகழ்கிறார்.
மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். ராஜகவுண்டர் (எ) எஸ்.ராஜ்குமார்
இவரது தாத்தா செங்கோடகவுண்டர் 1968-ல் மொழிப் போராட்டத்திற்காகச் சிறை சென்றவர் என்பதும், தந்தை சதாசிவம் தி.மு.க-வின் நீண்டகால விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது 21-வது வயதிலேயே தி.மு.க-வின் ஒன்றிய இளைஞரணித் துணை அமைப்பாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜகவுண்டர், தற்போது ‘வேட்டுவக்கவுண்டர்’ சமூக மக்களின் உரிமைக் குரலாக ஒலித்து வருகிறார்.
2013-ம் ஆண்டு கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தை நிறுவிய இவர், தொடர்ந்து ஆறு மாநில மாநாடுகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். குறிப்பாக, 2014-ல் குமாரபாளையத்தில் நடந்த முதல் மாநாடு முதல், 2025 நவம்பர் 30-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற ஆறாவது மாநில மாநாடு வரை இவரது வளர்ச்சி வியக்கத்தக்கது. இம்மாநாடுகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இவர், தி.மு.க அரசுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார். இவரது சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழக அரசு இவரை ‘சீர்மரபினர் நல வாரிய உறுப்பினராக’ நியமித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும், குறிப்பாக ஈரோடு (2.26 லட்சம்), கரூர் (1.10லட்சம்), கோவை (1.70 லட்சம்) மற்றும் நாமக்கல் (1.24 லட்சம்) உள்ளிட்ட மாவட்டங்களில் வேட்டுவக்கவுண்டர் சமூக மக்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கரூர், திண்டுக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி, விழுப்புரம். , திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் குறைந்த பட்சம் பத்து ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஒரு எம்.எல். ஏ. சீட் மூலம் சுமார் பத்து லட்சம் வாக்குகளை ஒருங்கிணைத்து தி.மு.க-விற்கு ஆதரவாகத் திரட்டுவதில் ராஜ் குமார் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
இதன் வெளிப்பாடாக, வரும் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் இவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகிறது. சமூக நீதிக்காகப் போராடும் அதே வேளையில், திராவிட சித்தாந்தத்தின் மீது பற்று கொண்ட ஒரு இளம் தலைவராக ராஜ் குமார் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய அரசியல் பின்புலமும், மக்கள் சக்தியும் கொண்ட ராஜ்குமாருக்கு தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு உறுதி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!
…. இதனால் தேர்தல் கமிஷன் இந்திய அளவில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனு கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது வரலாறு..!
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.அதுமட்டுமல்ல ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலுமே கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவதால் மற்ற சமூகத்தினர் வேட்டு கவுண்டர், முதலியார், நாடார், வன்னியர் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எண்ணுகின்றனர்.

ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் மீண்டும் அனைத்து கட்சிகளுமே கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர்களை வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திமுகவில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில நிர்வாகி ஏற்கனவே போட்டியிட்ட எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., வி. பி. சிவசுப்பிரமணியம் பாஜக சார்பில் இந்நாள் எம்.எல்.ஏ, சி.சரஸ்வதி மருமகள் கிருத்திகா சிவகுமார் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியிலும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்த அருண் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இச்சமூகத்தை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட