தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளின் ஐ.டி.விங் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது.
ஆனால், அந்த ஐ.டி.விங்கையே தோற்கடிக்கும் வகையில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் வலைதளங்களில் வெளியிடும் கருத்துக்கள்தான் மக்களை சிந்திக்க வைப்பதோடு, தி.மு.க.வையும் உயர்த்திப் பிடிக்கிறது.

அந்த வகையில் ‘தி.மு.க.வே தீர்வு’ என்ற தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,
‘‘பீகாருக்கும் கீழாக
தமிழ்நாட்டை அவர்கள்
பிடித்துத் தள்ளாது தடுக்கவும்…
அந்த வடக்கிந்திய
கம்பெனியான பாஜகவிடம்
பிணைக் கைதியாகி…
மண்டியிட்டு கிடக்கும்
அதிமுக உள்ளிட்ட அன்புமணி,
டிடிவி ஆகியோரது அரசியல் விடுதலைக்கும்…
திமுகவின் வெற்றி
ஒன்றே தீர்வாக
இருக்கப் போகிறது…!’’ என பதிவிட்டிருக்கிறார்.
மருது அழகுராஜின் இந்தப் பதிவுதான் மக்களை அனைவரையும் சிந்திக்க வைக்கிறது!
