‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா?’ என சேலத்தில் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் முதலில் பேசி விஜய்க்கும் தொண்டர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க தொடர்ந்து சரியாக பன்னிரண்டு 40 மணிக்கு விஜய் தனது பேச்சை துவங்கினார்.
த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது, ‘‘நம்மை யார் எந்த விஷயத்தில் கிண்டலாகவும், கேவலமாகவும் பேசுகிறார்களோ, அதே விஷயத்தில் ஜெயித்துக் காட்டுவதுதான் உண்மையான பவர் (Power)” எனத் தனது உரையைத் தொடங்கினார் விஜய். எல்லா கட்சிகளுக்கும் கூட்டம் நடக்க இடம் பாதுகாப்பு தரும்போது நமக்கு மட்டும் உரிய இடம் பாதுகாப்பு இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்.
விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர் விஜய் பனையூரை விட்டு வெளியே வா என்கின்றனர்.. என் வீடு எது தெரியுமா? என் வீடு தமிழ்நாடு தான். 8 கோடி பேரும் என் உறவு என் சொந்தம். என்னை பொறுத்தவரை தமிழ்நாடு தான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் எட்டு கோடி பேர் உள்ளனர். விஜய் தவறு செய்து விட்டேனாம். என்னை நேசிக்கும் மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மக்களுக்காக வந்தது தப்பா? உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை நீதி கேட்டு வந்திருக்கிறேன்.

யாரும் பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கும் போது ஏமாறாதீர்கள்.’ எங்க ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். வேறு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்’ உறுதிமொழி எடுங்கள். அவர்கள் தரும் எல்லா பணமும் உங்களுடையதுதான். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் காதிலே விசிலை ஊதுங்கள். செல்பே எடுக்காத கூட்டணி கணக்கு வேலைக்கு ஆகாது. கொடுக்கும் காசை வாங்கிவிட்டு கொடுப்பவர்கள் காதில் செவுளில் விசில் ஊதி அனுப்புங்கள்.
தற்போதைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசியல் செய்கிறேன். குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை ஓட்டு போட கேட்க வேண்டும் .குழந்தைகள் அம்மா, அப்பா, சித்தி என அனைவரையும் விசிலுக்கு ஓட்டு போட வைக்க வேண்டும்.
அரசியல் செய்ய மேதைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் அழிக்க வேண்டும் என நான் அரசியலுக்கு வரவில்லை. யார் மீதும் வன்மத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வந்தேன்.
எனக்கு அனுபவம் இல்லை எனக் கூறுபவர்களுக்கு கட்சி ஆரம்பித்த அண்ணாவை மறந்தது அனுபவமா? கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் ஜெயலலிதாவை மறந்தது அனுபவமா? எனக்கு அனுபவம் இல்லை தான் கொள்ளை அடிப்பதில் தவெக-விற்கு அனுபவம் இல்லை. சுட்டு போட்டாலும் எங்களுக்கு கொள்ளை அடிக்கவராது. 75 வருட கட்சியும் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பியுள்ளது. 50 வருட கட்சியும் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பியுள்ளது. என்னை போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவிகிதம் வாக்கு வாங்க யாருக்கு தில் திராணி உள்ளது .
“தமிழ்நாடு டெல்லிக்கு ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ (Out of control) என்றீர்கள். ஆனால், இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு என அனைத்தும் ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ ஆக உள்ளது.
உண்மையிலேயே இந்த ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் ஏன் விவசாயிகள் போராட்டம்..?மீனவர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், மாற்றுத்திறனாளிகள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர் போராட்டம், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் இதெல்லாம் ஏன்?
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பண்பு பங்கு என தவெக போட்ட பாம் அனைத்து கூட்டணிகளையும் பதற வைக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டில் சாத்தியமல்ல என்று ஸ்டாலின் சார் பதறுகிறார்.
இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி ஒன்றுஒன்று தூய சக்தி டிவிகே இரண்டு தீய சக்தி டி.எம்.கே.!
மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்ப்பது இருப்பதுதான் நமது முதல் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தேர்தல் அறிக்கை தெளிவான தேர்தல் அறிக்கையாக வெளிவரும்.ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமே அல்லாத வாக்குறுதி தர மாட்டோம். அதேபோல் ஆட்சிக்கு வந்த பின்னும் மக்களுக்காக எந்த எக்ஸ்டிரீமுக்கும் சென்று மக்களுக்காக போராட தயாராக இருக்கிறேன். அதில் உங்களது கனவுகள் அனைத்தும் நிஜமாகும் .நல்ல அதிகாரிகளுடன் மக்களை நேசிக்கும் குணத்துடன் நல்ல அதிகாரிகள் நல்ல ஆட்சி கொடுக்க முடியும்.வெல்வோம் ஒன்றாக ஆனால் வரும் வெல்த் (wealth) எல்லாம் நாங்களே பார்ப்போம் என்பது திமுகவின் நிலைப்பாடு.
இந்த விஜய்யை நம்புகிறீர்களா ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனதில் வைத்து அதற்கான தீர்வை காணுவோம் நல்லதொரு ஆட்சி அமைப்போம்’’ என முடித்தார் விஜய்.
