அ.தி.மு.க.வில் மிகவும் ஆக்டிவ் தலைவராக இருப்பவர் மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். ஆளும் தி.மு.க.வைக் கண்டித்து அவ்வப்போது டாக்டர் சரவணன் விடுக்கும் அறிக்கை, அறிவாலயத்தையே சற்று அசைத்துப் பார்க்கும். அந்தளவிற்கு புள்ளி விபரத்துடன் தி.மு.க. மீதான குற்றச்சாட்டை தன் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தி வருபவர்தான் டாக்டர் சரவணன்.

இந்த நிலையில்தான், கடந்த 2ம் தேதி மதுரை செல்லூர் கண்மாய் கரையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள புதற்களை அகற்றவும், உள்நுழையும் பகுதியில் உள்ள படிக்கற்களை சீரமைக்கவும், ஆங்காங்கே கூடுதல் இருக்கைகள் அமைத்துதரவும் டாக்டர் சரவணனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என டாக்டர் சரவணன் மக்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிலையில்தான், கடந்த 4ம் தேதி மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்மாய் மற்றும் கரைப்பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி. நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் நடைபயிற்சியின் போது ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என வாக்குறுதி கொடுக்கப்பட்டது, உடனடியாக தி.மு.க. ரியாக்ஷன் காட்டியதும்தான் மதுரை வடக்கு தொகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
