மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்துள்ள பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கை திட்​ட​மிட்​டபடி தொடரும் என்று மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

2026- 27 நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்​கல் செய்த பிறகு, செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘ பொதுத்​துறை நிறு​வனங்​களைத் தனியார்​மய​மாக்​கு​வது மற்​றும் அவற்​றின் பங்​கு​களை விற்​பனை செய்​வது தொடர்​பான மத்​திய அரசின் நிலைப்​பாட்​டில் எந்​த​விதமான மாற்​ற​மும் இல்​லை. மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்​துள்ள நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கைகள் தொடர்ந்து முன்​னெடுக்​கப்​படும்.

இதற்​கான பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு விற்​பனை செயல்​முறை​களும் தர்க்​க ரீதியான முடிவை எட்​டும் வரை அரசு உறு​தி​யுடன் செயல்​படும். அரசு நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​வதன் நோக்கம், வெறும் வரு​வாயை ஈட்​டு​வது மட்​டுமல்ல; அந்த நிறுவனங்​களின் மதிப்​பைக் கூட்​டி, தொழில்​முறை மேலாண்மையை புகுத்​தி, அவற்றை மேலும் திறம்​படச் செயல்பட வைப்​பதே எங்​களின் நோக்​கம். பட்​டியலிடப்​பட்ட பல பொதுத்துறை நிறு​வனங்​கள் தற்​போது சந்​தை​யில் மிகச் சிறப்பாக செயல்​படு​கின்​றன.

குறிப்​பாக, ஐடிபிஐ வங்​கி​யின் பங்கு விற்​பனை இறு​திக் கட்டத்தை எட்​டி​யுள்​ளது. இது தொடர்​பாக ஆர்​வ​முள்ள முதலீட்டாளர்​கள் தகுந்த ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே​போல், ஷிப்​பிங் கார்ப்​பரேஷன் உள்​ளிட்ட பிற முக்​கிய நிறு​வனங் ​களின் பங்கு விற்​பனை குறித்த பணி​களும் தொய்​வின்றி நடை​பெற்று வரு​கின்​றன.

பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​வது மற்​றும் நஷ்டத்​தில் இயங்​கும் சில அலகு​களை மூடு​வது என்​பது அரசின் ஒரு கூட்டு உத்​தி​யாகும். தனி​யார் துறை​யின் பங்களிப்பை அதி​கரிப்​ப​தன் மூலம் பொருளா​தா​ரத் திறனை மேம்படுத்​தவே இந்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

தேர்​தல் நடை​பெற உள்ள மாநிலங்​கள், நடை​பெறாத மாநிலங்​கள் என எந்த பாரபட்​ச​மும் இல்​லாமல், பட்​ஜெட்​டில் அனைத்து மாநிலங்​களுக்​கும் சரிசம​மாக திட்​டங்​கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்​ஜெட் தொடர்​பான ஆக்​கப்​பூர்​வ​மான விமர்​சனங்​களை வரவேற்​கிறேன். அதே​நேரம், எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி முன்​வைத்த விமர்​சனங்​கள் தவறானவை. இந்​தி​யப் பொருளா​தா​ரம் மிக​வும் வலு​வாக இருக்​கிறது. பாதிக்​கப்​பட்ட துறை​களுக்​காக பல்​வேறு சிறப்பு திட்​டங்​கள் அறிவிக்கப்பட்டுள்ளன’’ இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal