தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், பிரேமலதாவும் ‘மதில்மேல் பூனை’யாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை முடிவதற்குள் முடிவு எடுத்து அரிவிப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறிய ஓபிஎஸ், அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் எனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
