2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ‘குலவிளக்கு’தான் தி.மு.க.விற்கு ‘ஷாக்’ கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகளில், நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதலுக்கு நிதி உதவி செய்யப்படும். 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளில் இந்த ஐந்து வாக்குறுதிகளை அறிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பெண்களை முதன்மைப்படுத்தும், மக்கள் நலன் சார், மாண்பையும் பொருளாதார நீதியையும் போற்றும் வாக்குறுதிகளுடன் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

‘‘மக்களை முதன்மைப்படுத்தும் அ.தி.மு.க.வின் ஆளுமை மரபை இந்த வாக்குறுதிகள் பிரதிபலிக்கின்றன. மகளிர் அதிகாரம், வாழ்வாதார மேம்பாடு, அனைவருக்கும் வீடு, உழைப்புக்கு மாண்பு ஆகியவற்றில் எங்களின் கவனம் உள்ளது,” என அவர் தெரிவித்தார். ‘குளவிளக்கு திட்டம்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் பழனிசாமி கூறினார்.

தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 வழங்கி வரும் நிலையில், அ.தி.மு.க. அதை ரூ.1,000 உயர்த்தி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்துகிறது. மற்றொரு முக்கிய வாக்குறுதி, தற்போது பெண்களுக்கு உள்ள இலவச நகரப் பேருந்து பயணத் திட்டத்துடன், ஆண்களுக்கும் அதை விரிவுபடுத்துவதாகும்.

மேலும், வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதல், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்குதல் ஆகியவையும் அ.தி.மு.க.வின் பிற திட்டங்களாகும். “நல்லாட்சியைக் மீட்டெடுக்கும், நலிந்தவர்களைக் காக்கும், வெறும் கோஷங்கள் அல்லாமல் உண்மையான பலன்களை அளிக்கும் ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையைத் தமிழ்நாட்டிற்கு அ.தி.மு.க. வழங்கும்,” என்று பழனிசாமி உறுதியளித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் தி.மு.க. தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றாலும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினிடம் ‘பென்’ அமைப்பு கொடுத்துவிட்டதாம். சம்பிரதாயத்திற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் ‘தேர்தல் அறிக்கை’ வியூகங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுவிடுகிறதாம்.

அதன்படிதான் ‘குலவிளக்கு’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளைப் பெறமுடியும். ஆண்கள் வாக்குகளைப் பெறும் வகையில், ‘இலவச பஸ்’ திட்டத்தையும் அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. அறிவிக்க இருந்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி எப்படி முன்கூட்டியே அறிவித்தார் என்ற விசாரணையும் தி.மு.க. மேல்மட்டத்தில் ரகசியமாக நடந்து வருகிறதாம்!’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal