கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.
இந்த நிலையில்தான், கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். “தி.மு.க.வில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை ஆகியோர் கட்சி செயல்பாடுகளில் தலையிடுகின்றனர்” என்று அவர் கூறினார்.
இது அ.தி.மு.க.வின் உள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், எடப்பாடி பழனிசாமியின் உறவினரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணனின் உள் அரசியலால்தான் தி.மு.க.விற்கு சென்றார் என்ற முணுமுணுப்பும் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ‘அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் இருக்கிறது’ என செங்கோட்டையன் பேசியிருப்பது, மேலும் உட்கட்சிப் பூசலை அதிகப்படுத்தியிருக்கிறது.
