‘செக்ஸ் மாத்திரைகளை கொடுத்து எனது மகளுக்கு 24 மணி நேரமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்’ என நடிகையின் தந்தை பரபரப்பாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சீரியல் நடிகை சம்யுக்தாவுக்கும், நடிகர் விஷ்ணுகாந்துக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது, திருமணம் நடந்த ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி பிரிந்ததற்கான காரணம் தெரியாமல் ரசிகர் குழம்பி வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று திருமணம் செய்தேன் ஆனால், அவருக்கு 24 மணிநேரமும் அந்த நினைப்பு தான் என்று தனது கணவர் மீது புகார் கூறியிருத்தார்.

சம்யுக்தா கூறிய புகாரை மறுத்த விஷ்ணுகாந்த், எனக்கும் சம்யுக்தாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் அப்பாவால்தான் பிரச்சனை வந்தது. மேலும், திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, விஜே ரவியுடன் சேட்டிங் செய்ததற்கான ஆதாரத்தையும், தொலைபேசி ஆதாரத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார்.

விஷ்ணுகாந்த் ஆதாரத்தை வெளியிட்டதால் டென்ஷன் ஆன சம்யுக்தா யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் பேட்டி அளித்திருந்தார். அதில், நான் அந்தரங்க விஷயம் குறித்து வெளியில் பேச வேண்டாம் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். ஆனால், விஷ்ணு என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

அவர் என்னை திருமணம் செய்து கொண்டதே செக்ஸிற்காகத்தான், என்னை அவர் பெண்ணாகவே பார்க்கல, ஒரு பொம்மை மாதிரிதான் பார்த்தார். தினமும் ஆபாச வீடியோவை காட்டுவார். அதில் செய்வது போல செய்ய சொல்லுவார். வலி தாங்க முடியாமல் நான் கத்தினால், என்னை வாயை மூடச் சொல்லி அடிப்பார் என்று கண்ணீருடன் பேசினார்.

இதையடுத்து பேசிய நடிகை சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு என் மகளை 24 மணி நேரமும் ஒத்துழைக்க சொல்லி டார்ச்சர் செய்தார் என்றும், ஆபாச வீடியோவை காட்டி என் மகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார் என்று பகீர் தகவலை கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal