குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமான அனிகா இப்போதும் கூட அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு அவர் விசுவாசம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

ஏனென்றால் சிறு வயதிலிருந்தே ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் இவர் அரைகுறை உடையில் போட்டோ ஷூட் நடத்தி சில எதிர்ப்புகளை சம்பாதித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து அது போன்ற போட்டோக்களை வெளியிட்டு இப்போது ஹீரோயினாகவும் ப்ரமோஷன் பெற்றுவிட்டார். அந்த வகையில் தற்போது இவர் நடித்திருக்கும் ஓ மை டார்லிங் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அந்த அளவிற்கு அந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் படுமோசமான லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் 18 வயதே ஆன அனிகா இவ்வளவு தூரம் இறங்கி நடித்திருப்பதும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும் தொடர்ந்து அவர் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் அவருடைய சினிமா வாழ்வு கேள்விக்குறியாகி விடும் எனவும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் அம்மணியோ பணத்திற்காகவும், பட வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் தேர்வு செய்து வருகிறாராம்.

அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே அவர் பொதுவெளியில் கூட கண்டபடி டிரஸ் அணிந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு விழாவின் போது இவர் அணிந்திருந்த உடை பலரின் கண்களையும் கூச வைக்கும் அளவுக்கு இருந்தது. இது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட கதையாகவும் மாறி இருக்கிறது.

எப்படி என்றால் ஓ மை டார்லிங் ட்ரெய்லரை பார்த்ததற்கே அவரை தேடி கவர்ச்சி வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த படம் வெளிவந்தால் இவர் முழு ஐட்டம் நடிகையாகவே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் அந்தப் படத்தில் ட்ரெய்லரில் காட்டியதை விட மோசமான காட்சிகள் இருக்கிறதாம். இதனாலேயே பல இயக்குனர்களும் அனிகாவை இது போன்ற கவர்ச்சி வேடங்களில் புக் செய்ய காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal