ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதில் விருந்தோம்பல் பண்பு தவறிய அண்ணாமலையின் தரம் தாழ்ந்த நடத்தைகள் அவரது எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டுக்கு சாட்சிகளாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஓபிஎஸ் அணியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், மாவட்ட கழக செயலாளர் கே ஆர் அசோகன் உள்ளிட்டோர் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், பாஜகவின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்கத்தின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னம் கழகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவால் என்னால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது என்ற நிலையை என்றைக்கும் நான் உருவாக்க மாட்டேன் என்ற உறுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றிவாய்ப்பை உருவாக்கிட ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பாராட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் மாற்றக்கூடாத விதி என்று கட்டளையிட்டுப்போன கழகத்தின் சட்ட திட்ட விதிகளை தனக்கு ஏற்றார் போல் திருத்திக்கொண்டு அம்மா அவர்களுக்கு நிரந்தரமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பொதுச்செயலாளர் இருக்கையை அபகரித்து, அதிகாரப்பித்து பிடித்து அலையும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் அபகரிப்பை முறியடிக்கவும் அடிப்படை தொண்டர்களின் உரிமையை காத்திட்ட போராடும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் கழகத்தின் முன்னோடிகளையும் சட்டபோராளிகளையும் மாவட்ட கழகம் பெருமிதத்தோடு பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைச்செருகலாக வந்து கழகத்தின் சட்ட திட்ட விதிகளில் இல்லாத இடைக்காலம் என்று தனக்கு தானே சுய அறிவிப்பு செய்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியால் அண்ணாதிமுக இன்று மூன்று துண்டுகளாக பிளவுற்று நிற்கும் நிலையில், தோழமைக்கட்சியான பாரதிய ஜனதா கழகத்தின் ஒற்றுமைக்கு முன்னெடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அதே வேளையில் ஒருங்கிணைப்பாளர் இனை ஒருங்கிணைப்பாளர் என்னும் வரிசையிலான முக்கியத்துவத்துக்கு மாறாக முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை முதலில் சந்தித்து விட்டு அதன் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்திந்து ஓ.பி.எஸ் அறிவித்து இருக்கும் வேட்பாளரை திரும்ப பெற கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் இடைக்காலம் என்று இல்லாத பதவியை கொண்டு எடப்பாடியை குறிப்பிடுவதும், தொண்டர்கள் தேர்வு செய்து தேர்தல் ஆணையமும் ஒப்பமிட்டு சான்றிதழ் அளித்த அண்ணன் ஓ.பி.எஸ்-சை மட்டும் வெறும் ஓ.பன்னீர்செல்வம் என்று விளிப்பதும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ஒருதலைச்சார்பு நடவடிக்கைகள் என விமர்சிக்கப்பட்டுள்ளது. கழகத்திற்க்குள் நடக்கும் ஜனநாயக மீட்பு போரின் போக்கை அபகரிக்கும் எடப்பாடிக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கமலாலயம் சென்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களை விருந்தோம்பல் பண்பு தவறிய அண்ணாமலையின் தரம் தாழ்ந்த நடத்தைகள் அவரது எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டுக்கு கூடுதல் சாட்சிகளாகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். என்னும் ஒப்பற்ற மனிதரை எடப்பாடி மீதிருக்கும் பாசத்தால் தமிழக பா.ஜ.க தலைவர் குறைத்து அணுகுவதும் மதிப்பிடுவதும் குதர்க்கத்தோடு உடனான நல்லுறவில் பாய்சன் கலப்பதாகும் என சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.