மிழகம் முழுவதும் புதிதாக மா.செ.க்களை நியமித்து வருகிறார் ஓ.பி.எஸ்.! இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனைகளை மேற்கொண்டு புதிய நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமித்து வருகிறார்கள்!

இந்த நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், ஸ்ரீரங்கம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி புறநகர் மா.செ.வாக ஆதிதிராவிடரான பி.சாமிக்கண்ணு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை அ.தி.மு.க.வில் ஆதிதிராவிடருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை!

திருச்சி புறநகருக்கு ஒரு ஆதிதிராவிடரை மா.செ.வாக நியமனம் செய்திருப்பது பற்றி, அங்குள்ள மூத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், காமராஜர், கக்கன் காலத்தில்தான் ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே அரசியல் கட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், வாய்கிழிய ‘சமூக நீதி’ பற்றி ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் திருச்சி திருவாணைக் கோவிலைச் செர்ந்த பி.சாமிக்கண்ணுவை கு.ப.கி. பரிந்துரையின் பேரில் ஓ-.பி.எஸ். மா.செ.வாக ஆதிதிராவிடர் ஒருவரை நியமித்திருக்கிறார். முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றாலும், துறையூர், உப்பிலியபுரம், பச்சைமலை, வளையப்பட்டி போன்ற பகுதிகளில் ஆதி திராவிடர்களுக்கும் அதிகம் வசிக்கின்றனர். எனவே, இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ஆதிதிராவிடருக்கு மா.செ.பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் ஓ.பி.எஸ்!

முன்னாள் மாநகராட்சி கவுன்சிலான சாமிக்கண்ணு, 1984 & 1987 வரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார்! 1993 முதல் 1996 வரை ஸ்ரீரங்கம் கோவிலின் டிரஸ்டியாகவும் இருந்திருக்கிறார். அடிமட்டத் தொண்டர்களை எண்ணவோட்டங்களை பூர்த்தி செய்யும் அளவிற்கு இவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal