மத்திய அரசு ராணுவத்தில் அறிமுகப்படுத்த உள்ள, ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாநிலங்களில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை அறிவோம். பொய்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொய் எது, உண்மை எது என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:
பொய்
அக்னி வீரர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றது
உண்மை
அவர்கள் தொழில் துவங்க நிதி தொகுப்பு மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்
பிளஸ் 2 வகுப்புக்கு சமமான சான்றிதழ் மற்றும் மேல் படிப்புக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.அவர்கள் தொழில் தொடங்க நிதி தொகுப்பு மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்
வேலைவாய்ப்பு உறுதி
மத்திய ஆயுதப்படை பிரிவு மற்றும் மாநில காவல் துறையில் முன்னுரிமை.
பொய்
முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறவில்லை
உண்மை
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருக்கும் ஆயுதப்படை அதிகாரிகளுடன், விரிவான ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவு
பொய்
அக்னிபத் ஆயுதப்படைகளின் செயல்திறனை குறைக்கும்
உண்மை
உண்மையில் முதல் ஆண்டில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை, ஆயுதப்படைகளில் 3 சதவீதம் மட்டுமே இருக்கும்இந்த திட்டம் ஏற்கனவே பெரும்பாலானநாடுகளில், நடைமுறையில் உள்ளது. இது இளமையான செயல்திறன் மிக்க, ராணுவத்தை உண்டாக்கும் முறை என்று உலக அளவில் நிரூபிக்
