தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி கூட்டத்தில் பி.டி ஒ.,கோபால் கேள்வி கேட்ட பயனாளியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை இடையர்பாளையம் அரசு பள்ளியில் நடந்த கிராம சபா கூட்டம் 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில் முன்னதாக வந்து காத்திருந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள். மிகவும் டென்ஷனான நிலையில், கூட்டத்தை தலைமையேற்க வேண்டிய பி.டி.ஓ., காலதாமதமாகவே வந்தார்.

அதன் பிறகு பொது மக்கள் தங்களது பகுதி குறைகள் குறித்து புகார் மனுக்கள் அளித்தனர். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பலரும் எவ்வித அனுமதியின்றி வீடுகள் கட்டி வருகின்றனர் எதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. இது குறித்து ஏதெனும் நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

பி.டி.ஓ., கோபால் இது குறித்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்குறோம் என்றார். இது கிராமசபை கூட்டம் தானே இங்கேயே தீர்வு கூறுங்கள் என விக்ரம் கூறினார்.

அதற்கு ஆவேசமாக பி.டி.ஓ., கோபால் “அரசு அதிகாரியான என்னை மிரட்டுகிறீர்களா? நீங்கள் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுவதாக கேள்வி பட்டேன் காவல் துறையிடம் கூறி போலி வழக்கு பதிவு செய்து தேர்வு எழுத முடியாதபடி செய்து விடுவேன்” என பகிரங்கமாக அனைவரின் முன்னிலையிலும் பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பஞ்சாயத்தை மேம்படுத்துவற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரி, மக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal