நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன், மற்றக் கட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தி.மு.க. வேட்டியுடனும், காரில் தி.மு.க. கொடியுடனும் வந்தது அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பா.ஜ.க.வில் இணைந்து, தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கிறார். அதாவது, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா..? என்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

சரி, தி.மு.க.வில் இருந்து, பா.ஜ.க.விற்கு மாறிய கவுன்சிலர் யார் என்ன விபரத்தை பார்ப்போம்..!

நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில், ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினர், போட்டி வேட்பாளர்களை நிறுத்தி, கூட்டணி கட்சிகளுக்கான பதவிகளையும் கைப்பற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர். பிறகு திருமாவளவன் இதுகுறித்து ஓபனாகவே செய்தியாளர்கள் கூட்டத்தில் குமுறினார். திமுகவினர் செய்த அராஜகங்களை குற்றஞ்சாட்டி வேதனை தெரிவித்தார். இப்படி கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்த கொடுத்த நெருக்கடி காரணமாக, முதல்வர் ஸ்டாலின் அதிர்ந்து போனார். பதவியேற்ற அனைவரையும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதற்கான கெடுவையும் விதித்துள்ளார். ஆனால், பெரிய அளவில் அந்த உத்தரவை திமுகவினர் மதிக்கவில்லை என்றே தெரிகிறது. சிலர் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால், கூட்டணி கட்சிகள் மேலும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ராஜினாமா செய்ய சொன்ன, திமுக மேலிடம் மீது சில கவுன்சிலர்கள் அதிருப்தியிலும் உள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன. இதனால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவுக்கு ஷாக் தந்துள்ளார் ஒரு மொடக்குறிச்சி கவுன்சிலர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன..இதில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக, பாஜக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.சுரேஷ்குமார், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ, சி.சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில், பாஜக ஒன்றிய தலைவர் சேகர், எஸ்.டி.செந்தில்குமார், கவுன்சிலர் ஜெகதாம்பாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜகவில் இப்படி இணைந்தது பற்றி டி.சுரேஷ்குமார் சொல்லும்போது, கூறும்போது, “நாட்டு நலனுக்கான கட்சியாக பாஜக விளங்குவதால் அந்த கட்சியில் இணைகிறேன்” என்று காரணம் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து, அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளால், தி.மு.க. கவுன்சிலர் பா.ஜ.க.வில் இணைந்திருப்பதுதான், தி.மு.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal