முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவியில் இருக்கும் போது, ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டார். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது’ என்று உச்சநீதிமன்றதில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக செயல்பட்டுவந்த எஸ். பி. வேலுமணி சென்னை கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்துள்ளார் என புகார் எழுந்தது.

இது தொடர்பாக திமுக எம்.பி. ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இந்த விவகாரத்தில் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேஷ் ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவின்படி எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதன் விசாரணையை 10 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த சூழலில் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழக அரசு, டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவித சலுகையும் உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடாது எனக் கூறியுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்துள்ளார். தவறான வழியிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும், எஸ்.பி. வேலுமணி செயல்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் ரூபாய் 114 கோடி மதிப்புள்ள ஒப்பந்தப் பணியில் ரூபாய் 25 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களில் ரூபாய் 25 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வேலுமணி சுமார் 58 கோடி அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் பொய்தகவல்களை தெரிவிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது 2021வெளியிடப்பட்ட ஏஜிசி அறிக்கையின்படி எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal