தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஜி.கே.வாசன். அப்போது, தமிழக அரசியல் கள நிலவரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த மே மாதம் முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சி சார்பில் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமரை வாசன் சந்தித்தது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal