இந்தியாவில் 2022 நிதியாண்டில், மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட குறைவாகும்.
இது தொடர்பாக ஐசிஆர்ஏ லிமிடெட் ரேட்டின் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், ‘‘கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பத்திரங்களை வெளியிட்டு தமிழக அரசு ரூ.65,400 கோடி திரட்டி உள்ளது. இது கடந்த 2021 நிதியாண்டில் திரட்டப்பட்ட ரூ.79,500 கோடியை காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும்.
2022 நிதியாண்டின் முதல் 9 மாதத்தில், மாநில அரசின் வருவாயும் 17 சதவீதம் அதிகரித்து 1.3 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வருவாய் செலவீனமும் 1 சதவீதம் அதிகரித்து 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. 2022 நிதியாண்டில், ஏப்ரல் – டிச., மாதத்தில் மாநில அரசின் மூலதன செலவும் 25,200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். கடந்த பட்ஜெட்டில், 2022 நிதியாண்டில் மூலதன செலவு ரூ.42,200 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.அதேபோல், 2022 நிதியாண்டில், 4வது காலாண்டில்(ஜன., – & மார்ச் ) ரூ.25,800 கோடி கடன் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனவரி மற்றும் பிப் மாதத்தில் மட்டும் ரூ.13,400 கோடி கடன் வாங்கியது.
தமிழகத்திற்கு அடுத்த மஹாராஷ்டிரா – ரூ.64,750 கோடி, கர்நாடகா- ரூ.59 ஆயிரம் கோடி , உ.பி., – ரூ.57.500 கோடி, மேற்கு வங்கம்- 57,500 கோடி கடன் வாங்கி உள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல்வாதிகளிடம் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டாலே, தமிழகத்தின் கடனை அடைத்துவிடாலாம் என்கிறார்கள் பாமர மக்கள்!
