தமிழகத்தின் உச்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்பத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும், சோனியாகாந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தாமல் இருப்போது, தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

டில்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், ஜன்பத் சாலையில் சோனியா வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அளித்த பதில்:

‘‘அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி உள்ளது. கடைசியாக டிசம்பர் 2012 ம் ஆண்டு தான் வாடகை பாக்கி செலுத்தப்பட்டது. அதேபோல், 10 ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை பாக்கி உள்ளது. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாடகை செலுத்தப்பட்டது.

சாணக்யாபுரி சி–&2, 109 என்ற முகவரியில் வசிக்கும் சோனியாவின் தனிச்செயலர் வீணா ஜார்ஜ்ம் கடைசியாக 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் வாடகை செலுத்தி உள்ளார். அவர் அரசிற்கு ரூ.5,07,911 பாக்கி வைத்துள்ளார்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

டில்லியில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு அலுவலகம் ஒதுக்கும் வீட்டுவசதி வாரிய விதிகளின்படி, ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும். இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2010ம் ஆண்டு ரோஸ் அவென்யூவில் 9–ஏ என்ற முகவரியில் கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. இதன்படி, அக்பர் சாலையில் செயல்படும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் அக்கட்சிக்கு சொந்தமான பங்களாக்களை 2013ல் காலி செய்ய வேண்டும். ஆனால், இது வரை காலி செய்யாமல், காங்கிரஸ் அவகாசம் கேட்டு வருகிறது.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal