பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி‘ திரைப்படம் இன்று வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷைப் பாராட்டிப் பேசும்போது அவரைத் தொட்டுப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷின் முகபாவனையைக் கவனித்த இணையவாசிகளில் சிலர், அவர் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறி இயக்குநர் மிஷ்கினின் செயலை விமர்சித்தனர். அதேநேரம், இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பதாகக் கூறி மற்றொரு தரப்பினர் மிஷ்கினுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், “முதலில் என்னுடைய முகம் அசௌகரியமாக இருந்ததை நீங்கள் பார்த்தீர்களா. நாங்கள் ஒரு தந்தை மகள் போன்று உறவை பகிர்ந்து கொள்கிறோம் என்று நானும் சொல்லியிருந்தேன். அவரும் சொல்லியிருந்தார். இதை நீங்கள் கேட்கவில்லையா.

இரண்டாவதாக, நான் அசௌகரியமாக உணர்ந்ததாகவே இருக்கட்டும்! திரைப்படங்களில் எங்களை தொடுகிறார்கள் என்பதற்காக பொது இடங்களிலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? சில விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal