கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் மீது தானாக விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு டிஜிபியிடம் கேட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லப்புரத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மற்றும் புகார் தெரிவிக்க வந்த சாமானியரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்த துணை சபாநாயகர் ரவி சங்கர் ஆகியோரை முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்ததாக தகவல்களாக வெளியாகின. அதில், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்திருப்பதாகவும், அதில் குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்ததாக தகவல்களாக வெளியாகின.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதான விசாரணையில் பாரபட்சம் இருக்கக்கூடாது எனவும், மாநில காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தற்போதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன, குறிஞ்செய்தியில் என்ன அனுப்பப்பட்டுள்ளது என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வுக்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal