கோவையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள பாட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர், காந்திபுரத்தில் நவீன முறையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைததார்.

இதற்கு முன்னதாக, கோவையில் சாலைவலம் மேற்கொண்ட முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் வீசப்பட்ட தண்ணீர் பாட்டிலைப் பிடித்து முதல்வருக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal