‘மாற்றம் வேண்டும்’ என மக்கள் விஜய்க்கு வாக்களித்து விட்டு இன்றைக்கு விண்ணை தொட்ட விலைவாசியால் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘விலைவாசியும்… புலிகேசியும்…’ எனும் தலைப்பில் இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘#விலைவாசியும் #புலிகேசியும்…’’ எனும் தலைப்பில்,
‘‘கடிவாளம்
இல்லாத குதிரையாக
விலைவாசி
கட்டுப்பாடற்ற
சட்டம்
ஒழுங்கு…
வந்து வந்து
போகும்
மின்சாரத்துக்கு
வரலாறு
காணாத
கட்டணக் கொள்ளை…
நிர்வாகம்
தெரியாத
அமெச்சூர்
அமைச்சர்கள்…
நிஜத்தோடு
நிழலை
சேர்த்துக்குழப்பும்
தலைமைத்துவம்
இல்லாத
மாலுமியாக
முதலமைச்சர்…
சாதி மத
அடையாளங்களை
அரசியலோடு சேர்த்து
அரசிலும்
வலியத் திணிக்கும்
முகச்சுளிப்புகள்…
விளம்பரத்தை
கொண்டு
வெத்துப் படத்தை
வெற்றிப் படமாக்க
முயற்சிக்கும்
சினிமாத்
தனங்கள்…
இப்படி
பிழைகளை
தோரனமாக்கிக்
கொண்டு
“தான் செய்வது அனைத்தும் சரியானது”
“அது விமர்சிக்கப்
படக் கூடாதது”
என்னும் தன்னம்பிக்கை பிறழ்ந்த சர்வாதிகார மனப்பான்மையில் நடக்கும்
இந்த நடைவண்டி ஆட்சி
தமிழகத்தின் எதிர்காலத்தை
பின்னோக்கி நகர்த்துகிறது…
கொரனா தாக்கத்தினும் கொடுஞ்சீரழிவை தமிழ்நாடு சந்திக்கப் போகிறது…
ஆம்…
” சிந்திந்து
ஓட்டுப் போடுவதற்கு பதில்
ஓட்டுப் போட்டுவிட்டு
சிந்திக்கும்
பரிதாபத்தில்
மக்கள்”…
