முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அவர். இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்பொழுது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை நடத்தப்படுகிறது. அன்பில் மகேஸின் திருச்சி இல்லம் மற்றும் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

தவிர, இவரது உறவினர் வாளாடி கார்த்தி வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal