‘‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்! மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. 100 சதவீத வெற்றியை எட்டும். த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வருமா? ’’ என்ற கேள்விக்கும் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதன் அடிப்படையில், ஒரு புதிய வரலாறு படைக்கும் தலைவராக, இந்தியாவுக்கே வழிக்காட்டியாக திகழ கூடிய தமிழக முதல்வராக இருக்கிறார். அவர் இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர். வரலாற்றை படைக்கூடிய தலைவராக இருக்கிறார்.

அவர்கள் சொல்வதை போல் நாட்கள் எண்ணப்படவில்லை. அவர்களுக்கு தான் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. தவெக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை எட்டும்; மற்ற கட்சிகள் என்ன செய்ய போகிறது என்பதை நீங்கள் தேர்தல் முடிவில் தெரிந்து கொள்வீர்கள். தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்; இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும்’’இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal