மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் ரூ.350 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலாங்கரையிலிருந்து தினமும் 18.5 கி.மீ தூரம் அவர் தலைமை செயலகத்திற்கு பயணிப்பதால், பாதுகாப்பு பணிகளால் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

போயஸ் கார்டனுக்கு குடியேறுவதன் மூலம், பாதுகாப்பு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், முதல்வர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தனது நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தான் தலைமை செயலகம் சென்று வருகிறார். முதல்வர் விஜய் பதவியேற்றதில் இருந்தே அரசு ஊழியரைப் போன்று சரியாக காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் சென்று விடுகிறார். மதியம் அங்கேயே லஞ்ச் முடித்துவிட்டு மீண்டும் பணி செய்கிறார். இதன் பிறகு மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு சென்னை நீலாங்கரை வீடுக்கு திரும்புகிறார்.

விஜய் வசிக்கும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கும் தலைமைச் செயலகத்திற்கு இடையே 17 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இதனால் விஜய் வீட்டில் இருந்து தலைமை செயலகமும், தலைமை செயலகத்தில் இருந்து வீட்டிற்கும் செல்லும்போது பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதோடு, பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனால் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலை செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தினமும் எதிர்கொண்டு வரும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சாலையின் ஒரு பகுதியில் முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் முதல்வர் விஜய் பல்வேறு சூழலில் அரசு பணத்தை மிச்சப்படுத்தவே நினைப்பதாகவும் இதனால் தலைமைச் செயலகம் அருகே வீடு பார்த்து தங்கவும் பிளான் செய்து வருகிறாராம்.

முதலில் முதல்வர் விஜய் சென்னை பசுமை வழிச் சாலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயோ அல்லது முன்னாள் அமைச்சர்கள் காலி செய்த வீடுகளில் ஏதாவது ஒன்றிலோ குடியேற வாய்ப்பு உள்ளது என பேசப்பட்டது. இந்த நிலையில் தான் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ ஜெயலலிதா வீட்டினை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் வீடு பார்க்கலாம் என்று விஜய் கூறியதாகவும், அப்போது ஜெயலலிதா வீட்டினை வாங்க சிலர் யோசனை கொடுத்ததாகவும் தெரிகிறது.

ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை வாங்குவதற்கு விஜய் தரப்பில் இருந்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் ரூ.350 கோடி கொடுத்து வாங்க டீலிங் நடைபெற்று வருவதாகவும் பேசப்படுகிறது. தற்போது இந்த வீடானது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் தான் இருந்து வருகிறது. எனவே அவரிடம் இது குறித்து பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டினை விஜய் வாங்கி அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்வது என்றால் வெறும் 8 கிமீ தூரம் தான்.

இதனால் பெரிய அளவில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. மிகவும் விவிஐபி ஏரியாவாக பார்க்கப்படும் போயஸ் கார்டனில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal