கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்ல முடியாது. ஒருவேளை வெளிநாடு தப்ப முயன்றால் ‘லுக்அவுட்’ நோட்டீசை பயன்படுத்தி விமான நிலையத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜி, அசோக் குமாரை வெளிநாடு தப்பிக்க விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal