தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார்.
அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அருண்ராஜுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை துறை ஒதுக்கீடு தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை வேகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
விஜய்: * முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு பொது நிர்வாகம், உள்துறை, பெண்கள் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.
புஸ்சி ஆனந்த்: * அமைச்சர் என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு.
ஆதவ் அர்ஜுனா: * அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு.
அருண்ராஜ்: * டாக்டர் கே.ஜி. அருண்ராஜுக்கு சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கீடு.
செங்கோட்டையன்: * அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் துறை ஒதுக்கீடு.
வெங்கட்ரமணன்: * அமைச்சர் பி. வெங்கட்ரமணனுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒதுக்கீடு.
நிர்மல்குமார்: * அமைச்சர் ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை ஒதுக்கீடு.
ராஜ்மோகன்: * அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கீடு.
டிகே பிரபு: * டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு.
கீர்த்தனா: * செல்வி எஸ். கீர்த்தனாவுக்கு தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை ஒதுக்கீடு.
