மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், ‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தூக்கத்தை தொலைத்துவிட்டு துடிக்கிறது’ என கடுமையாக விமர்சித்திருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!

மருது அழகுராஜின் விமர்சனங்கள் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வகையில் இலக்கிய நடையில் அமைந்திருக்கும். அதே சமயம் எதிராளிகளை அந்த வார்த்தைகள் துவம்சம் செய்யும். அந்த வகையில், ‘மிரட்டும்… சோழர் படை!’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,

‘‘ராஜராஜ சோழனின்
அடிபற்றி
ஆட்சிக்கு வந்த
ராஜேந்திர சோழன்

சோழப் பேரரசின்
பரப்பளவை
ஆழக் கடல் கடந்து
அகலப் படுத்தினான்..

இலங்கை
மாலத்தீவு
கடாரம்
சிரீவிசயம்

மலேயா
சிங்கப்பூர்
சுமத்ரா
கம்போடியா

வியட்னாம்
இந்தோனேசியா
மியான்மர்
வங்கதேசம் என

தெற்காசியா
முழுவதும் அந்த
சுத்த வீரச்
சோழனுக்கு
சொந்தமானது

கடாரம்
கொண்டவனாகி
கடல் கடந்த
பேரரசை
கட்டி எழுப்பினான்..

மேலும்
தென் இந்திய
பகுதிகளான
தமிழ்நாடு
ஆந்திரம்
கருநாடகா
கேரளம்

தெலுங்கானா
இவற்றோடு
சத்தீஷ்கர் ஒரிசா
மேற்கு
வங்கத்தையும்

அந்த
கம்பீரச் சோழனே
கைப்பற்றினான்..

இப்படி

பொன்னி
நதிக்கரையில்
சூல் கொண்டு

பொற்காலம்
படைத்த
அந்த புறநானூற்று
வீரத்தை

இன்றைய
தமிழகத்தின்
தற்கால
அரசியலோடு
பொருத்திப்
பார்க்கும்

வடக்கிந்திய
கம்பெனியான
பாஜக…

தூக்கத்தை
தொலைத்துவிட்டு
துடிக்கிறது…

“ராஜராஜ
சோழனாக
முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலினையும்“

“ராஜேந்திர
சோழனாக
உதயநிதி
ஸ்டாலினையும்“

உருவகம்
செய்து கொண்டு
உதறல்
எடுத்து
குதிக்கிறது…

“உதயநிதி
உதயநிதி” என

ஊரெல்லாம்
உலாவந்து
ஊளையிட்டு
தகிக்கிறது..

“திராவிட மாடல்
நாளை
தேசத்தின்
மாடலாகுமோ”
எனும்
அச்சத்தில்

தலைக்கு
விலை
வைப்போம்
என்றும்

தரம் தாழ்ந்து
குரைக்கிறது..

“ஸ்டாலின்
மோர் டேஞ்சர் than
கருணாநிதி”
என

அன்று
அச்சம் கொண்டு
அலறிய எச்சை
ராஜாக்கள்

இன்று
“உதயநிதி
மோர் டேஞ்சர் than
ஸ்டாலின்’’ எனும்

கூடுதல்
நடுக்கத்தில்
குலை நடுக்கம்
கொள்கிறார்
என்றால்

இப்படி
பகைவருக்கு
நடுக்கும் தரும்

நம்
படை நடத்தல்
சரி தானே…

என்னநாஞ் சொல்றது”

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal