கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சென்ற நிலையில், அடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக ஜனவரி 28ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஜன. 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்.

என்.டி.ஏ. கூட்டணியின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் மோடி தலைமையில் நடந்து முடிந்த நிலையல், அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் வருவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal