ஆனந்த கிருஷ்ணா இயக்கத்தில் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக மெட்ரோ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிரிஷ் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நான் வயலன்ஸ்’ படத்திலிருந்து ‘கனகா’ பாடலுக்கு லிரிக்கல் வீடியோ வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கனகா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஸ்ரேயா சரண் நான் வயலன்ஸ் படத்தின் கனகா பாடலுக்கு ‘இஞ்சி இடுப்பை அசைத்து’ ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ வெளியாகிய 48 மணி நேரத்தில் 48 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
