‘தி.மு.க. மீது எதிர்க்கட்சிகள் அவதூறுகளையும், பழிபாவங்களையும் சுமத்தி ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது’ என தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#விழிப்பாய் தோழா #நெருப்பாய்…’’எனும் தலைப்பில்,
ஸ்பெக்ட்ரம் ஈழத்தில் நடந்த இன அழிப்பு போன்றவற்றில்அன்று
திமுக மீது பூசப்பட்டஅவதூறுகளாலும் உண்மைக்கு மாறான பழிபாவங்களாலும்
குறிப்பாக இந்திராகாந்தி படுகொலை ராஜிவ் காந்தி படுகொலை போன்ற நிகழ்வுகளில் எதிர் இயக்கங்களுக்கு வாய்த்த அனுதாபங்களாலும்
இப்படி அரசியல் வரலாற்றில் ஆட்சி பரிபாலனங்களின் மீதான மக்களின் அபிமானங்களுக்கு மாறாக
அவதூறுகள் மற்றும் அனுதாப அலைகளால் மட்டுமே எதிராளிகளால் திமுக வீழ்த்தப்பட்டது என்பதை குறிப்பில் கொண்டுள்ளபகையாளிகள்…
இப்போதும் இந்திய தேசத்திற்கே வழிகாட்டும் முன்மாதிரி அரசாட்சியை இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சியோடும்
அதற்கென தமிழக மக்களால் தரப்பட்டுள்ள தொடர் வெற்றி மகிழ்ச்சியோடும்..
பீடுநடை போடும்முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகோன்னத அரசியலை சதி செய்து பழி சுமத்தி சாய்க்க முடியுமா என
சித்தர்களின் பூமியான கரூரில் முன்னோட்டம் பார்த்து அவர்கள் மூக்கறுபட்டிருக்கிறார்கள்.
ஆனாலும்அவர்கள் இன்னும் இன்னும் முயற்சிப்பார்கள்..
அதனைமதி கொண்டும் மக்கள் துணை கொண்டும் முறியடிப்பது கழகத்துச் சிப்பாய்களின் கடமை அன்றோ…
மருது…..’’ என பதிவிட்டிருக்கிறார்!
