கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில், தற்போது எடப்பாடியை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரந்தின் சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். அவருக்கு சென்னை பசுமை வழிச்சாலையில் அரசு பங்களா இருந்த போதிலும், சுற்றுப்பயணம் காரணமாக அவ்வப்போது தனது சேலம் இல்லத்திலும் அவர் தங்குவதுண்டு.
கடந்த இரு தினங்களுக்கு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தார். அவர் வெளியே வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்ததை கைக்குட்டையால் முகத்தை மறைத்தார் என செய்தி பரவியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகளும் இருந்தனர். அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாஜக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்க நயினார் நாகேந்திரன் சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
சந்திப்பின் போது, அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து இருவரும் தனியாக விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.