“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு திருட்டுக்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதி. வாக்கு திருட்டுப் பற்றி எனது சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்த ஆதாரங்கள் இந்த மோசடியின் வீச்சை காட்டுகிறது.

இன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொள்கிறார். இந்தச் சூழலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் கணினி மூலம் சரிபார்க்கக் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது அரசியல் ஆதாயத்துக்காக வாக்காளர்களை நீக்கும் முயற்சியை முறியடிக்கும். ஜனநாயக தாக்குதலான வாக்குத் திருட்டு விவகாரத்தில் விசாரணை தேவை. திமுக இந்தப் போரில் தோளோடு தோள் நிற்கிறது. வெட்டவெளிச்சமாக இந்திய ஜனநாயகத்தை பாஜக திருடுவதை நாங்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா போன்ற மாநிலங்​களில் ஏராள​மான வாக்​காளர்​கள் போலி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். ஏராள​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி குற்​றம் சாட்டி இருந்தார்.

மேலும், நேற்று அவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில், “வாக்கு திருட்டு என்​பது ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்​படை நோக்​கத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். தெளி​வான வாக்​காளர் பட்​டியல் என்​பது​தான், நேர்​மை​யான சுதந்​திர​மான தேர்​தலை உறுதி செய்​யும். தேர்​தல் ஆணை​யத்​திடம் நாங்​கள் வைக்​கும் கோரிக்கை எல்​லாம் தெளி​வாக உள்​ளது. தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யாக செயல்பட வேண்​டும்.

மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நாட்டு மக்​களும் அரசி​யல் கட்​சிகளும் அதை ஆய்வு செய்ய முடி​யும். எங்​களு​டைய இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி பிரச்​சா​ரம் தொடங்​கு​கிறோம். அதற்​காக ‘லீttஜீ://ஸ்ஷீtமீநீலீஷீக்ஷீவீ.வீஸீ/மீநீபீமீனீணீஸீபீ’ என்ற புதிய இணை​யதளத்தை தொடங்கி வைக்​கிறோம். அத்​துடன் 96500 03420 என்ற செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிடு​கிறோம். இணை​யதளத்​தில்பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைக் கூறி, பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்க வேண்​டும். செல்​போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்​சா​ரத்​தில் இணை​ய​லாம்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal