பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ராமதாஸ் புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.

பாமகவில் அன்புமணி அடங்கிய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அமைத்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால், இரண்டு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் நியமித்தும், எதிரானவர்களை நீக்கியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் அடங்கிய பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவை கலைத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக, பாமகவின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், கரூர் பாஸ்கர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பரந்தாமன், சிவபிரகாசம், அருள்மொழி ஆகியோர் அடங்கிய புதிய தலைமை நிர்வாக குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார்.

ஆக மொத்தத்தில் அன்புமணியின் ஒட்டுமொத்த அதிகாரத்தை டாக்டர் ராமதாஸ் பறித்து உத்தரவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal