அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் செயல்பாடுகளை குறைக்கும் வகையிலும், ராஜ் சத்தியனுக்கு எதிரான தி.மு.க.வின் சதிவலைக்கு, அ.தி.மு.க.வின் ஆதரவு நபர் ஒருவரே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆளும் தி.மு.க.,வின் செயல்பாடுகள், அமைச்சர்களின் உளறல் பேச்சு, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு உடனுக்குடன் சமூக வலைதளத்தில் கார்ட்டூன் போட் டும், தி.மு.க.,வை உசுப்பேத்தும் வகையில் கருத்து களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாகிய ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல இடங்களில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் அ.தி.மு.க., ஐ.டி., பிரிவிற்கு தி.மு.க., சார்பிலும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அ.தி.மு.க., ஐ.டி.,பிரிவு செயல்படுவது போல் தி.மு.க., ஐ.டி.,பிரிவு நிர்வாகிகள் செயல்படுவதில்லை என அக்கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை நிரூபிக்கும் வகையில், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் கைதான ஞானசேகரன் பேசிய சார் யார்? என்ற பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. ஐ.டி.விங் சார்பில் உருவாக்கப்பட்ட ‘யார் அந்த சார்’ வாசகம் உலகம் முழுவதும் டிரெண்டிங் ஆனது. இது தி.மு.க.விற்கு மிகப்பெரிய ‘தலைவலி’யை ஏற்படுத்தியது.

இப்படி அ.தி.மு.க. ஐ.டி.விங்விற்கு ராஜ்சத்தியன் பொறுப்பேற்ற பிறகு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில்தான், ராஜ் சத்தியனுக்கு எதிராக, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பேசும் நபரை தி.மு.க. மறைமுகமாக ஏவிவிட்டிருக்கிறது என்கிறார்கள். அந்த நபர் தி.மு.க.வில் உள்ள சில அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர். ஆனால், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுபவர் போல பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அந்த நபருக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும், அ.தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர்களும்தான் காப்பாற்றுகின்றனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. ஐ.டி.விங்கை செயல்படாமல் தடுக்கும் வகையில் ராஜ் சத்தியனுக்கு எதிராக புகாரை கிளப்பியிருக்கிறார் என்கிறார்கள் அந்த நபரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal