‘‘வானத்தை போர்வையால் மறைக்க முடியாது. அதுபோல ஸ்டாலின் திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகளை விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முடியாது. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல மக்கள் இல்லாத சாலையில் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா. சரவணன் கடும் குற்றச்சாட்டு சாட்டியிருக்கிறார்.

மாநில அளவில் கொடைக்கானலில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் முதல் பரிசு வென்ற ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு கழக பொதுச் செயளாலர் எடப்பாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு , நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகையை கழக மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் வழங்கி கூறியதாவது;

‘‘மதுரையில் திமுக பொதுக்குழு என்ற பெயரில் ஒரு ஆடம்பர, ஆர்ப்பாட்டத்தை நடத்தி மக்கள் முகம் சுளிக்க வகையில் செய்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை. திமுக நடத்திய பொது குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றினர் இதில் கச்சத்தீவு மீட்போம் என்று கூறியுள்ளார்கள், கச்சத்தீவை தாரை வார்த்தையை திமுக தான், அதேபோல மத்திய அரசில் 17 வருடம் திமுக அங்க வகித்தது அப்போது தான் கல்வி மத்திய அரசு பட்டியில் சென்றது, தற்போது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர தீர்மானம் போட்டுள்ளனர் இது மிகவும் வேடிக்கையானது.

அதேபோல உதயநிதி பாராட்டியும் தீர்மான போட்டுள்ளனர். ஒரே ஆண்டில் 30,000 கோடி மக்கள் பணத்தை உதயநிதியும், சபரீசனும் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று அப்போது நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். தியாகராஜன் கூறினாரே அதற்காக உதயநிதிக்கு பாராட்டா?

அல்லது இன்றைக்கு அமலாக்கத்துறை தேடும் டாஸ்மார்க்கை ஆட்டிப்படைத்து குபேரனுக்கே பணம் கொடுக்கும் வகையில் உள்ள ரத்தீஷ், மற்றும் டாண் பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆகாஷ் என்பவர் ஆயிரம் கோடியில் படம் எடுக்கிறார் இப்படி உதயநிதி நெருக்கம் இருந்தால் அவர்கள் திடீரென்று கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடிக்கலாம் அதற்காக உதயநிதிக்கு பாராட்டா?

நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் அந்த ரகசியம் உங்களுக்கு தெரியும் என்று எதையும் செய்யாமல், 23 மாணவர்கள் பலியாக காரணமாக இருந்ததற்காக உதயநிதிக்கு பாராட்டா?

அதேபோன்று திமுக பொதுக்குழுவில் கடந்த நான்காண்டுகளில் நாம் செய்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார் அப்படி என்றால் இந்த நான்காண்டுகளில் இந்தியாவிலே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகமாக உள்ளது, மூன்று முறை மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி உயர்வு ,கட்டுமான பொருள் விலை உயர்வு, சமையல் பொருட்கள் விலை உயர்வு, கடந்த நான்கு ஆண்டுகளில் 18,300 பாலியல் சம்பவங்கள், போதை பொருள் கடத்தலில் தமிழகம் முதலிடம் இதையெல்லாம் மக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் இதைத்தான் எடுத்துக் கூற வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் அவலங்களை, மக்கள் விரோத செயல்களை எல்லாம் எப்படி வானத்தை போர்வையால் போட்டு மறைக்க முடியாதோ,அதே போல விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முயற்சிக்கிறார்கள் அது ஒருபோதும் எடுபடாது.

இதைவிட ஸ்டாலின் திமுக பொதுக் குழுவுக்கு வந்த பொழுது ரோடு ஷோ என்பதை நடத்தினார், அதற்கு கூட பொதுமக்கள் யாரும் வரவில்லை கூலிக்கு ஆள் பிடித்து தான் வந்தார்கள், ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துவது போல, மக்கள் இல்லாத சாலைகளில் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியது மிகவும் நகைச்சுவையாக இருந்தது என்று மக்களை கூறி வருகிறார்கள்.

ரோடு ஷோவில் மக்களுக்கு நீங்கள் டாட்டா காட்டினீர்கள் ஆனால் மக்களுக்கு உங்கள் ஆட்சிக்கு டாட்டா காட்டிவிட்டார்கள். 2026 ஆண்டில் எடப்பாடியார் ஆட்சி தான் என்பதை மதுரை மக்கள் தீர்ப்பாக எழுதி விட்டார்கள் அதை நீங்கள் எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் அசைக்க முடியாது’’ என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal