சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனும், நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ள நிலையில், தொண்டர்கள் விரும்பியதை போல் மெகா கூட்டணி அமைக்கப்படும், நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி ஐ.டி.விங்கிற்கு ரகசிய கட்டளை இட்டிருப்பதுதான், அ.தி.மு.க.வினரையே வியக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.