திருத்தணி முருகன் கோயிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளுக்கு தங்கத்தேர் இழுக்க வந்த அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் வந்த மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் மலைக்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி படத்தை வைத்துக்கொண்டு தங்கத்தேர் இழுக்கும்போது எடப்பாடி வாழ்க நாளை முதல்வர் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது பணம் கட்டி தங்கத்தேர் இழுக்க வந்த திருவள்ளூர் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் அவரது மனைவி செல்வி மற்றும் திமுகவினர், தங்கத்தேரை இழுத்துக் கொண்டு இருந்த அதிமுகவினரை தடுத்து நிறுத்தி, ‘‘நாளைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றால் மற்றவர்கள் எல்லாம் யாருடா?? முட்டாள் முட்டாள்’’ என்று கடுமையாக வசை பாடினார்.

அதிமுகவினர் மற்றும் திமுகவினர் தங்கத்தேர் எடுக்கும் கோயில் வளாகத்தில் கடுமையாக வார்த்தைகளில் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு தரிசனத்தில் அதிமுகவினர் அதிகளவு கோயிலுக்கு உள்ளே சென்றதால் இவர்களுக்கு எப்படி அனுமதி உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லையா என்று முருக பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, தங்கத்தேர் இழுக்கும் போது ‘2026ல் எடப்பாடியார் ஆட்சி’ என கோஷம் போட்ட அ.தி.மு.க.வினரை கடுமையாக எதிர்த்த பெண், தனிப்பட்ட முறையில் காயத்திரி ரகுராமிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.

தவிர, ‘நீங்கள் தங்கத்தேர் இழுத்தபோது, எடப்பாடி பழனிசாமி வாழ்க… என்கிறீர்கள். தி.மு.க.வைச் சேர்ந்த நான் அங்கிருக்கும் போது, எங்கள் கட்சித் தலைமை எங்களை எப்படி நினைக்கும்… அதற்காகத்தான் எதிர்த்தோமே தவிர வேறொன்றும் இல்லை’’ என்றாராம். ஆனாலும், தி.மு.க.மீது தி.மு.க.வினரே அதிருப்தியில் இருப்பதும் இதன்மூலம் தெரியவருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal