எடப்பாடியாரின்பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழவும், 2026 முதலமைச்சராக வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகர் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினை கழக மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் வழங்கினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக முழுவதும் திருக்கோவிலில் எடப்பாடியாரின் பெயரில் சிறப்பு பூஜை செய்தும், பொது மக்களுக்கு அன்னதானமும், அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், மருத்துவ முகாம், இரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிற

இந்த நிலையில்தான் நேற்று (27ம் தேதி) முருகனின் ஐந்தாம்படை வீடான திருத்தணியில் டாக்டர் சரவணன் தங்கத்தேர் இழுத்து, 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என சிறப்பு வழிபாடுகளும், அன்னதானங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார் மருத்துவர் சரவணன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal