சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பெயரை பரிந்துரை செய்துள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 4 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நீதித்துறையில் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
புதிய நீதிபதிகளை நியமித்தும், பல்வேறு நீதிபதிகளை இடமாற்றம் செய்தும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பட்டியலில் 3 புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 5 பேருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு, 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் 22 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்றவும் சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பெயரை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் மகிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா ராஜஸ்தான், சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். சத்தீஷ்கரின் பிலஸ்பூரை சேர்ந்த இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் பணியாற்றிய அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.