தமிழகத்தின் காவல்துறை இயக்குநராக (டி.ஜி-.பி.) இருப்பவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ். இவர் வரும் 31.08.2025 அன்று ஓய்வு பெறுகிறார். எனவே அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுகிறது. எனினும் சங்கர் ஜிவாலுக்கு இரண்டு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படலாம்.

தவிர, சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இடத்தை நிரப்ப சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ராத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் வர வாய்ப்பிருக்கிறது.

2026ல் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்த டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆளும் கட்சி நீண்ட ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal