அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.