அல்வாவிற்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடைக்கு சோதனை வந்திருக்கிறது.
நெல்லை இருட்டுக்கடையை கணவர் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் அல்வா விற்பனையில் பிரபலமான இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்காவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
கனிஷ்காவுக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் வரதட்சணை கொடுமை என புகார் எழுந்துள்ளது.