முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
‘மாஜி’ ராஜேந்திர பாலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரவீந்திரன் என்பவர் புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
